கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பயணி ஒருவர் குழாய்களில் மறைத்து கடத்தி வந்த 180 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் இந்திய மதிப்பு 13 லட்சத்து 69 ஆயிரத்து 800 ரூபாய் என அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார். தங்கத்தை கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb