திருச்சி கிளியூர் ஏரிக்கு, வளர்ந்து வரும் புலம்பெயர் பறவைகள்
புலம்பெயர்ந்த பறவைகளின் குறிப்பிடத்தக்க வருகையுடன், திருச்சி கிளியூர் ஏரி உள்ளூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளின் மைய புள்ளியாக மாறியுள்ளது. இந்த இடத்தை பறவைகள் சரணாலயமாக அறிவிக்குமாறு மாநில அரசை தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த கிளியூர் கிராமத்தில் உள்ள சுமார் 380 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழில் நிறைந்த கிளியூர் ஏரியில் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் இறுதி வரை சுமார் 180 க்கும் மேற்பட்ட பறவையை இனங்கள் வந்து செல்கின்றன.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய முதல் ஐரோப்பிய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் இருந்து பறவை இனங்கள் வர தொடங்கியுள்ளது. தற்பொழுது இந்த ஏரியில் வெள்ளை அரிவாள் மூக்கன், உன்னி கொக்கு, பாம்பு தாரா, மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, கொண்டை நீர் காகம், ஊசிவால் வாத்து, நீலச்சிறவி வாத்து, பழுப்பு கீச்சான்கள் உள்ளிட்ட பறவையை இனங்கள் வரத் தொடங்கியுள்ளது.
ஐரோப்பா, ஆசியா மற்றும் சைபீரியா உள்ளிட்ட பல்வேறு உலக இடங்களிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 25,000 பறவைகளை ஈர்க்கும் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் மையமாக கிளியூர் ஏரி தனித்து நிற்கிறது.
மேலும் பறவை இனங்களை பாதுகாக்கவும், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது போன்ற நீர்நிலைகளை பறவைகள் சரணாலயமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.