சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வடக்கு வாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்ய உள்ளே அனுமதித்து சாமி தரிசனம் செய்த பின் மேற்கு வாசல் வழியாக பக்தர்கள் வெளியே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பக்தர்கள் வெளியே செல்லும் மேற்கு வாசல் பகுதியில் பக்தர் ஒருவர் உள்ளே செல்லும் பொழுது அந்தப் பகுதியில் இருக்கும் பாதுகாவலர் அவரை தடுத்து போகக்கூடாது என கூறியுள்ளார்.

அதற்கு அந்த பக்தர் இதற்கு முன்னால் சிலரை உள்ளே அனுமதித்தீர்கள் எங்களையும் அனுமதியுங்கள் என அந்த பாதுகாவலரிடம் கேட்டபோது தகாத வார்த்தையில் பேசியும் மரக்கட்டையை எடுத்து அடிக்க வருகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்தர்கள் வெளியே செல்லும் வழியில் உள்ளே சாமி தரிசனம் செய்ய கிராக்கி என்ற பெயரில் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதித்தார்கள். இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட நிலையில் பின்பகுதியில் பக்தர்களை அனுமதிக்காமல் கோவில் இணை ஆணையர் பிரகாஷ் கட்டுப்பாடு விதித்திருந்தார்.

தற்போது கோவில் இணை ஆணையருக்கு தெரியாமல் பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு சிலரை உள்ளே விடுவதால் தங்களையும் சாமி தரிசனம் செய்ய உள்ளே விட வேண்டும் என வாக்குவத்தில் ஈடுபட்ட பக்தர் ஒருவரை பாதுகாவலர் கட்டையால் அடிக்க வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவில் நிர்வாகம் இது குறித்து முறையான விசாரணை நடத்தி இந்த பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb