திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புது திட்டம் ஒன்று  மேயர் அன்பழகன் கூறி உள்ளார்

திருச்சி நகராட்சியாக இருந்த போது 1966-ம் ஆண்டு பணிகள் அனைத்தும் தொடங்கி அப்போதைய முதலமைச்சர் பக்தவச்சலம் சார்பில் 1972-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த பேருந்து நிலையமானது திறக்கப்பட்டது. 2006 -ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. 

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலையம் முழுவதுமாக பஞ்சப்பூர் மாற்றப்பட்ட பிறகு மாநகர பஸ்கள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இதுமட்டுமல்லாமல் 6 ஏக்கருக்கு மேல் இருக்கும் இந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டக்கூடிய வகையில் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
52 ஆண்டுகளாக இருந்த பேருந்து நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக மேயர் அன்பழகன் கூறியதாவது:-
இருக்கின்ற பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்களை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் மால்கள், அலுவலக கட்டிடங்கள், பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவற்றில் எதாவது அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சியில் பொழுதுபோக்குவதற்காக எந்த ஒரு இடங்களும் மிகப்பெரியதாக இல்லை. இவ்வாறு இருக்க கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் அமைக்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb