2024-11-15
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
மன்னார்புரத்தில் இருந்து கொள்ளிடம் டோல்கேட் பாலம் வரை உயர்மட்ட சாலை அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு!

மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாநகரில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் இருக்கும் பகுதியான மன்னார்புரத்தில் இருந்து கொள்ளிடம் டோல்கேட் பாலம் வரை உயர்மட்டச்சாலை திட்டம் செயல் படுத்தினால் வாகன விபத்துக்களும், போக்குவரத்து நெரிசலும் குறையும் என்று மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சாலை மார்க்கத்தில் 8 மேம்பாலங்கள் இருக்கின்றன. இந்த மேம்பாலங்களை ஒட்டியே பெரிய துாண்கள் அமைத்து மன்னார்புரத்தில் இருந்து கொள்ளிடம் டோல்கேட் பாலம் வரை உள்ள சுமார் 9 கி.மீ. தூரத்துக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்பட்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments