வொண்டர் வேர்ல்டு தீம் பார்க்கில் அதிரடி ஆபர்!

தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பெரும்பாலான பொழுதுபோக்குக்கு என்று எதுவும் இல்லாத நிலையில் வாட்டர் தீம் பார்க் அமைக்கப்பட்டது.
திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வாண்டையார் குழுமத்தின் சார்பில் வொண்டர் வேர்ல்ட் எனும் தீம் பார்க் ஆனது கடந்த மே மாதம் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது. ஜூன் மாதம் முதல் பொதுமக்களின் செயல்பாட்டுக்கு வந்த நிலையில் வொண்டர் வேர்ல்ட் தீம் பார்க் ஆனது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் வொண்டர் வேர்ல்ட் தீம் பார்க்கில் பல்வேறு புதிய புதிய ஆபர்களை அறிவித்துள்ளது.
இந்த தீம் பார்க்கானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டு இருக்கும் என நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் டிக்கெட் கவுண்ட்டர்கள் 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. செவ்வாய் அன்று இந்த தீம் பார்க்கிற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த தீம் பார்க்கிற்கு வெளியில் இருந்து உணவுகள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த தீம் பார்க்கில் நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 700 ரூபாயும், முதியவர்களுக்கு 60 மேல் உள்ள முதியவர்களுக்கு 600 ரூபாயும் , குழந்தைகளுக்கு 90 சென்டிமீட்டர் முதல் 140 சென்டிமீட்டர் வரை 600 ரூபாயும், 90 சென்டிமீட்டருக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.
தீபாவளி அன்று திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆபர் என்னவென்றால் பள்ளி கல்லூரி மாணவர்கள் 10 டிக்கெட் வாங்கினால் 2 டிக்கெட் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக ஒரிஜினல் ஐடி கார்ட்டை எடுத்து செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மொத்தமாக வரும் மக்களுக்கு அதிக அளவிலான தள்ளுபடியில் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....