பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது

உலக பிரசித்தி பெற்ற ஶ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இறங்கி செல்ல ஏதுவாக இன்றைய தினம் வரை பேருந்து நிலையம் எதுவும் ஸ்ரீரங்கம் கோவில் அருகே இல்லாததால் பொதுமக்கள் நீண்ட தூரத்திற்கு முன்பே சாலையில் இறங்கி நடந்து செல்கின்றனர். இதனால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்ததால் பயணிகளுக்கு வசதியாக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த ஸ்ரீரங்கம் பகுதியில் மட்டும் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தற்போது வரை வசித்து வருகின்றனர்.

ஆனால் ஸ்ரீரங்கத்தில் இதுவரை பேருந்து நிலையம் என எதுவும் இல்லாதது ஒரு குறையாகவே இருந்து வந்தது. எனவே ஶ்ரீரங்கத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால் நாளுக்கு நாள் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே வந்தது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பெயரில் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு காத்திருந்தது. இதனை தொடர்ந்து ஶ்ரீரங்கத்தில் 11.10 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி  வழங்கி பணிகள் அனைத்தும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb