பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் ஆகியோா் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து, நிலுவையில் உள்ள பணிகளை டிசம்பருக்குள் முடிக்க அறிவுறுத்தினா்.

கட்டுமானப் பணிகள் 90 சதம் முடிந்துள்ளன. மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு, குழாய் இணைப்பு, பேருந்து நிலைய மேல்தள பணிகள், முகப்புப் பணிகள் மட்டும் விஞ்சியுள்ளன. இந்தப் பணிகளையும் டிசம்பா் மாத இறுதிக்குள் முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது

பணிகள் அனைத்தும் முடிந்து ஜனவரி மாதம் பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb