அண்ணா விளையாட்டு அரங்கு பகுதியில் எப்பொழுதும் காலை நேரங்களில் அரசு அதிகாரிகள் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். இந்த விளையாட்டு அரங்கை சுற்றி முட்புதர்கள் மண்டி கிடந்த நிலையில் அவ்வப்போது திருச்சி மாநகராட்சி மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து இந்த பகுதியினை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது இந்த விளையாட்டு அரங்கிலே மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வளர்ச்சி பணிகளில் இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தேசிய அளவிலான சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக இதனை மாற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

அண்ணா விளையாட்டு அரங்கை சுற்றி வழித்தடத்தில் பாதசாரிகள் நடப்பதற்கும் நடைப்பயிற்சி மேற்கொள்ள சமமான பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் ஆங்காங்கே அமர்ந்து பேசுவதற்கான இருக்கைகள் அமைக்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து அந்த பகுதியில் பூங்கா ஒன்றும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பூங்கா செல்லும் வழியில் வண்ண அலங்கார விளக்குகள் பொருத்தப்பட இருக்கிறது. இந்த பணிகள் அனைத்தும் வருகின்ற 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பணிகள் அனைத்தும் தொடங்கி நடைபெற்று வருவதால் விரைவில் இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb