ஜமால் முகமது கல்லூரியின் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் தக்காளியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட தக்காளி தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தக்காளி விலை வீழ்ச்சியடையும் காலங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தைத் தவிா்க்க தக்காளியில் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும் என கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் தக்காளியில் இருந்து
மதிப்பு கூட்டப்பட்ட தக்காளி தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.உணவிற்கு பொதுவாக தக்காளி தான் பயன்படுத்தப்படும். ஆனால் தக்காளியில் இருந்து தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருளான தக்காளி தாள்களையும் இனி பயன்படுத்தலாம் என்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பேராசிரியர் தெரிவிக்கிறார்.

நிகழ்வில் ஜமால் முகமது கல்லூரியின் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறை உதவிப் பேராசிரியா் சங்கீதா கூறியது:

விலை குறைவாக தக்காளி விற்கும் நாள்களில், அவற்றை சேகரித்து சுத்தம் செய்து தோல்கள், விதைகளை நீக்கி, கூழாக்கி மென்மையாக அரைத்து சீராகப் பரப்பி, உலத்தி தரமான தக்காளி தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றைத் துண்டுகளாக்கி சமையலுக்குப் பயன்படுத்தலாம். இதில் இயற்கை ஆண்டி ஆக்சிடண்ட் உள்ளதால் உடலுக்கு நல்லது. இதன் தரம், சுவை, சத்துகள் குறையாது. இந்தத் தக்காளி தாள்களை தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன நிபுணா்கள் ஆய்வுசெய்து அங்கீகாரம் வழங்கியுள்ளனா்.

இந்தத் தக்காளி தாள்களை சாதாரணமாக காற்றுப்புகாத பைகளில் 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம். அதற்கும் மேல் பயன்படுத்துவதாக இருந்தால் குளிா்ச்சாதன பெட்டிகளில் வைத்துப் பாதுகாத்து பயன்படுத்தலாம். இப்போது ஆய்வகத்தில் வைத்துத் தயாரிக்கப்படும் இந்த தக்காளி தாள்களை, விவசாயிகள் தங்களது வீட்டில் வைத்து எளிமையாக தயாரிக்கும் அளவுக்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது சாத்தியமாகும் நிலையில், தக்காளி பயிரிடும் விவசாயிகள் தக்காளி விலை குறையும் சமயத்தில் தங்களது வீடுகளிலேயே தக்காளித் தாள்கள் தயாரித்து விற்றுப் பயனடையலாம் என்றாா்.

சிறுநீரக கல் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ள நோயாளிகள் தக்காளியை அதிகம் உணவில் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இந்த தக்காளி தாள்களில் தக்காளி விதைகளை முழுவதுமாக நீக்கப் பட்டதால் டயாலிசிஸ் செய்து கொள்பவர் களும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களும் இதனை பயன்படுத்தலாம்.

வழக்கமாக டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலும் தக்காளி விலை அதிகரித்து காணப்படும் நிலையில் இந்த தக்காளி தாள்கள் நுகர்வோர் களுக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கும் என்றாா் அவா்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb