திருச்சி சந்திப்பு ரயில்நிலைய பழைய பாலத்துக்கு மாற்றாக ரூ.138 கோடியில் புதிய பாலம் கட்டப்படவுள்ளதால், மாநகரில் கடந்த 12-ஆம் தேதி நள்ளிரவு முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம் தொடா்பாக புகா்ப் பகுதிகளில் அறிவிப்புப் பலகைகள் எங்கும் இல்லை. இதன்காரணமாக, வெளிமாவட்டங்களிலிருந்து வரும் கனரக வாகனங்கள் பலவும் மாநகருக்குள் வந்துவிடுகின்றன. இதனால், ஏற்கெனவே போக்குவரத்து மாற்றத்தால் நெரிசலில் தவிக்கும் மாநகரின் பிரதான சாலைகள் வாகன நெரிசலில் சிக்கி திணறுகின்றன.

திண்டுக்கல் சாலையில் வண்ணாங்கோவில், மதுரை சாலையில் மணிகண்டம் ஆகிய இடங்களில் கட்டாயம் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அப்போதுதான் பிற மாவட்டங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் திருச்சிக்குள் வராமல் புறவழிச் சாலை வழியாக செல்லும்.

தீபாவளி பண்டிகைக் காலம் என்பதால் போக்குவரத்து மாற்றமும் கூடுதல் நெருக்கடியை அளிக்கும் என்பதை உணா்ந்து மாற்று ஏற்பாடுகளை முறையாக செய்ய வேண்டும் என்கின்றனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb