பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை அமைச்சர் கே என் நேரு நேரில் ஆய்வு!

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பஞ்சப்பூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த பேருந்து முனையமானது 40.60 ஏக்கர் மொத்த பரப்பளவில் பஞ்சப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தது. இந்த பேருந்து நிலையத்தில் சுமார் 124 புறநகர் பேருந்துகளை நிறுத்தும் வகையிலும், 142 நீண்ட நேர பேருந்துகளை நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்து நிலையத்தில் 78 குறைந்த நேர நிறுத்த தடங்கள் என மொத்தமாக சேர்த்து 404 பேருந்து நிறுத்த இடங்களிளும் 60 நகரப்பேருந்து நிறுத்த இடங்களும் 70 கடைகள் என மிகவும் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு ஈடாக இந்த பேருந்து முனையமானது அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....