வண்ணத்துப்பூச்சி பூங்காவை மக்கள் பார்வையிட10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 5 ரூபாயும், பெரியவர்களுக்கு 10 ரூபாய் மற்றும் ஒளிப்படக் கருவிக்கு 20 ரூபாயும் என நுழைவு கட்டணமாக மக்களிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வனத்துறை சார்பில் ஒரு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை மக்கள் இலவசமாக பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே இதன் மூலம் விலங்குகள் பட்டாம்பூச்சியின் வரலாறை மக்கள் தெரிந்து கொள்ளலாம். எனவே இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 

வாகன நிறுததுவதற்கு கட்டணமாக மிதிவண்டிக்கு 5 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும், மகிழுந்துக்கு 20 ரூபாயும், சிற்றுந்து பேருந்துகளுக்கு 75 ரூபாயும் இங்கு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb