திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் AC வசதி

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்துக்கு சோலார் மூலம் மின்சாரம் வழங்கப்படும் என்று திருச்சி மாவட்ட மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பயணிகளின் வசதிக்காக ஏசி காத்திருப்பு அறை மற்றும் பல்வேறு வசதிகளுடன் இந்த பேருந்து முனையமானது அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் சுமார் 14 கோடி ரூபாய் செலவில் ஏசி வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தின் மேல் தளத்தில் சோலார் பேனல்கள் பதிக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் இந்த பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் சோலார் பேனல்கள் வைக்கப்படுவது மின்சார கட்டணத்தை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஏசி வசதி செய்யப்படுவது என்பது எங்களுக்கு ஒன்றும் செலவு கிடையாது. பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஈடுசெய்து கொள்ளலாம். பயணிகளுக்கு இந்த ஏசி வசதி மிகவும் நன்றாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb