திருச்சி மாநகராட்சி குப்பையில் போடப்பட்ட கழிப்பறை தொட்டிகளை பூந்தொட்டிகளாக மாற்றி அசத்தி வருகிறது.

திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் அழகுபடுத்தப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள கழிவறைகளில் அலங்கார செடிகள் நடப்பட்டுள்ளன.
தூக்கி எரியப்பட்ட மூன்று கழிவறைகளை வரிசைஅயாக வைத்து அதில் அலங்கார செடிகளால் அலங்கரிக்கபட்டுள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் சாலையைத் தவிர காலியாக உள்ள நிலத்தில் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டுவதற்கு இந்த முயற்சியானது தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இதேபோல் அகற்றப்பட்ட கழிவறைகளை மீண்டும் வைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதேபோன்று வைப்பதால் மக்கள் அங்கு குப்பை கொட்டுவதில் கணிசமான அளவு குறைந்துள்ளது. முதலில் சாலையோரங்களில் ஏன் கழிப்பறைகள் உள்ளன என்று மக்கள் குழப்பமடைந்தனர். பின்னர் அழகுச்செடிகள் வைத்து மாநகராட்சி மக்கள் ஆச்சரியப்படுத்தியது.
திருச்சி மாவட்டத்தை தொடர்ந்து அழகுப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் ஒரு சிலர் சாலைகளில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சியின் புதிய முயற்சியாக பயனுள்ள வகையில் திருச்சி மாநகரை அழகுபடுத்தும் முயற்சி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் தனித்துவமான அழகைச் சேர்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடானது செய்யப்பட்டுள்ளது.
"அடிக்கடி குப்பை கொட்டும் இடங்களில், தூக்கி எறியப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி, நாங்கள் தொடர்ந்து அழகுபடுத்தல் செய்து வருகிறோம். மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் பசுமையான இடங்களாக இந்த தளங்களை மாற்றுவதே எங்கள் குறிக்கோள்" என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....