திருச்சி மாவட்டத்தில் உருவாகும் 3 மார்க்கெட்டுகள்

பஞ்சப்பூரிலும் தற்போது சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் காய்கறி மார்க்கெட் ஆனது அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6.5 ஏக்கர் பரப்பளவில் காந்தி மார்க்கெட், 10 ஏக்கர் பரப்பளவில் கள்ளிக்குடி மார்க்கெட் மற்றும் 22 ஏக்கர் பரப்பளவில் பஞ்சப்பூர் மார்க்கெட் அமைக்கப்படுவதால் திருச்சி மாவட்டத்திற்கு 3 மார்க்கெட்டுகள் கிடைக்கப்போகிறது.
பஞ்சப்பூர் மார்க்கெட் ஆனது திறக்கப்பட்ட பின்பு காந்தி மார்க்கெட் சீரமைக்கும் பணிகள் ஆனது நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கள்ளிக்குடி மார்க்கெட்டில் இருந்து ஆப்பிள், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த மூன்று மார்க்கெட்டுகளும் முழுமையாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்டால் திருச்சி மாவட்டத்தை சுற்றி இருக்கும் அனைத்தும் வியாபாரிகளும் பயனைடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....