பஞ்சப்பூரில் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆம்னி பேருந்து நிறுத்தம் அங்கு கட்டப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆம்னி பேருந்து நிலையம் ஆனது சுமார் 17.5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆம்னி பேருந்து நிலையம் 3.2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என்றும் இந்த பேருந்து நிலையத்தில் 82 பேருந்துகளை நிறுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பேருந்து நிலையம் பஞ்சப்பூர் பகுதிக்கு மாற்றப்படும் போது மத்திய பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்லலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb