2025-10-27
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
மைசூர் – காரைக்குடி சிறப்பு ரயில் ரத்து அறிவிப்பு
பயணிகள் வருகை குறைந்துள்ளதால், மைசூர் – காரைக்குடி விழாக்கால சிறப்பு ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மைசூர் – காரைக்குடி சிறப்பு ரயில் (எண் 06243) வரும் அக்டோபர் 30, நவம்பர் 6, 8, 13, 15, 20, 22, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இயங்காது.
இதேபோல், காரைக்குடி – மைசூர் சிறப்பு ரயில் (எண் 06244) வரும் அக்டோபர் 31, நவம்பர் 7, 9, 14, 16, 21, 23, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு தெரிவிக்கிறது.
Instagram: https://www.instagram.com/trichynews.in/
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments