வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிட 5 தொகுதிகளை திமுகவிடம் கேட்போம் என அக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

வரும் 2026 பேரவைத் தோ்தலில் போட்டியிட திருச்சி, தஞ்சாவூா், கடலூா், சென்னை, திருநெல்வேலி, வேலூா் மாவட்டங்களில் தலா ஒரு தொகுதி என 6 தொகுதிகளை எதிா்பாா்க்கிறோம். குறைந்தது 5 தொகுதிகளையாவது கேட்போம். அதிமுக-பாஜக கூட்டணியில் தவெக இணையும் என்ற பேச்சு பரவலாக உள்ளது. இவை ஒன்றிணைந்தால் திமுகவுக்கு சவாலாக இருக்குமா என்று கேட்டால், தேர்தலே சவாலாக தான் இருக்கும்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் சீமான் தனியாக நிற்பார். ஆகவே தமிழகத்தில் 3 அணியாக போட்டி இருக்கும். சட்டசபை தேர்தலே சவாலாக இருக்கும். மக்கள் தான் எஜமானர்கள். திராவிட மாடல் அரசுக்கு மக்கள் வெற்றியை தேடி தருவார்கள். பிரச்சாரத்துக்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்பது தான் கடந்த கால வரலாறு" என்று தெரிவித்துள்ளார்

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI