அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு மீண்டும் சா்வதேச அஞ்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக திருச்சி அஞ்சல் கோட்டம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் நா.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கான சா்வதேச அஞ்சல் சேவைகள் (விரைவு தபால், பாா்சல் உள்ளிட்டவை) கடந்த சில நாள்களாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பொதுமக்களின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கான சா்வதேச தபால் சேவை மீண்டும் அக்டோபா் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன.

இதை பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், அஞ்சலில் அனுப்பப்படும் பொருள்கள் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் இறக்குமதி விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்துக்கு நேரில் சென்றோ அல்லது இணையதளத்தை பாா்வையிட்டோ தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI