தீபாவளி கூட்ட நெரிசலை குறைப்பதற்காக திருநெல்வேலி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, திருநெல்வேலி - செங்கல்பட்டு - திருநெல்வேலி வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி, திருநெல்வேலி - செங்கல்பட்டு வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06156) வரும் 21, 22 -ஆம் தேதிகளிலும், மறுமாா்க்கமாக செங்கல்பட்டு - திருநெல்வேலி வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06155) வரும் 21, 22 -ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.

21 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது திருநெல்வேலியிலிருந்து காலை 4 மணிக்குப் புறப்பட்டு, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூா் வழியாக செங்கல்பட்டுக்கு பிற்பகல் 1.15 க்கு சென்றடையும். மறுமாா்க்கத்தில், செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக திருநெல்வேலிக்கு இரவு 11.55 க்கு சென்றடையும்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI