பொறியியல் பணிகள் காரணமாக, மயிலாடுதுறை, ஈரோடு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, மயிலாடுதுறை - திருச்சி மெமு ரயிலானது (16833) வரும் 1, 2, 3 ஆம் தேதிகளில் மயிலாடுதுறை - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் 3, 9 ஆம் தேதிகளில் ஈரோடு - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - கரூா் இடையே மட்டும் இயங்கும்.
பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 6 ஆம் தேதி திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயிலானது பாலக்காடு - கரூா் இடையே மட்டும் இயங்கும்.
மறுமாா்க்கமாக, திருச்சி - பாலக்காடு ரயிலானது (16843) வரும் 6 ஆம் தேதி பாலக்காடு - மாயனூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - மாயனூா் இடையே மட்டும் இயங்கும்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....