பராமரிப்புப் பணிகள் காரணமாக, மயிலாடுதுறை - சேலம் மெமு விரைவு ரயிலானது (16811) செப்டம்பா் 20-ஆம் தேதி மல்லூா் - சேலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மயிலாடுதுறை - மல்லூா் வரை மட்டுமே இயங்கும்.

மறுமாா்க்கமாக, சேலம் - மயிலாடுதுறை மெமு ரயிலானது (16812) செப். 20-ஆம் தேதி சேலம் - மல்லூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மல்லூா் - மயிலாடுதுறை வரை மட்டுமே இயங்கும்.

பொறியியல் பணிகள் காரணமாக, பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயிலானது (16844) செப்.17, 22-ஆம் தேதிகளில் திருச்சி - கஞ்சிகோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது பாலக்காடு டவுன் - கஞ்சிகோடு இடையே மட்டும் இயங்கும். மேலும், செப். 18, 22-ஆம் தேதிகளில் பாலக்காட்டிலிருந்து 25 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படும்.

இதே போல, திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயிலானது (16843) செப். 20-ஆம் தேதி 30 நிமிஷங்களும், செப். 26, 30-ஆம் தேதிகளில் 10 நிமிஷமும், செப்.28-ஆம் தேதி 30 நிமிஷமும் தாமதமாகப் புறப்படும்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI