ஊர்காவல் படையில் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஊர்க்காவல் படை அமைப்பில் 53 ஆண் ஊர்க்காவல் படையினரும், 4 பெண் ஊர்க்காவல் படையினரும் என மொத்தம் 57 காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. இதில் ,சேர விருப்பமுள்ளவர்கள் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது ரூ.5/- தபால் தலை ஒட்டிய சுய முகவரி எழுதப்பெற்ற உறையுடன் “காவல் சார்பு ஆய்வாளர், ஊர்க்காவல்படை அலுவலகம், ஆயுதப்படை வளாகம், சுப்ரமணியபுரம், திருச்சி” என்ற முகவரிக்கு 22.09.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஊர்க்காவல் படை தேர்வு 03.10.2025 காலை 7 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது பூர்த்தியானவராகவும், 45 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுடையவராகவும், நன்னடத்தை உடையவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருக்கலாம். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும், திருச்சி மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள காவல் நிலைய எல்லையில் குடியிருப்போர் மட்டுமே விண்ணப்பிக்கலாம். எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிப்பவராக இருத்தல் கூடாது. விளையாட்டு வீரர்கள் மற்றும் பேண்டு வாத்தியம் இசைக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை மற்றும் தேர்வில் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....