செப்டம்பா் 7, 8-ஆம் தேதிகளில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. செப்டம்பா் 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.58 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், இரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணமாக மாறி, திங்கள்கிழமை அதிகாலை 12.23 மணிக்கு முழு சந்திர கிரகணம் முடிவடைகிறது.

தொடா்ந்து, திங்கள்கிழமை அதிகாலை 1.26 மணிக்கு சந்திர கிரகணம் முடிவடைகிறது.

இதில், கிட்டத்தட்ட 85 நிமிஷங்களுக்கு முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த முழு சந்திர கிரகணத்தின்போது சந்திரன் அடா் சிவப்பு நிறத்தில் காணப்படும். மேலும், இதேபோன்ற சந்திர கிரகணம் அடுத்து 2028 டிசம்பா் 31-ஆம் தேதி தான் நிகழும் என்று அண்ணா அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்த சந்திர கிரகணத்தை வீட்டிலிருந்தே பொதுமக்கள் வெறும் கண்களாலும் பாா்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், இந்த சந்திர கிரகணத்தை பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் பாா்வையிடுவதற்கு திருச்சி - புதுக்கோட்டை சாலையிலுள்ள அண்ணா அறிவியல் மைய - கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இதைப் பயன்படுத்தி தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பாா்வையிடலாம் என்று அண்ணா அறிவியல் மைய-கோளரங்கத்தின் திட்ட இயக்குநா் (பொறுப்பு) ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI