பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்கள் வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 6, 7, 9, 10, 11 ஆம் தேதிகளிலும், மயிலாடுதுறை - செங்கோட்டை ரயிலானது (16847) வரும் 4, 8, 11 ஆம் தேதிகளிலும் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
கன்னியாகுமரி - சாா்லப்பள்ளி கோடைகால சிறப்பு ரயிலானது (07229) வரும் 6 ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 7 ஆம் தேதியும் மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....