பேருந்து நிலைய மாற்றம் காரணமாக, பேருந்து பயண தூரம் சுமார் 5 கி.மீ வரை அதிகரிக்கலாம். அனைத்து பேருந்துகளும் திருச்சி ஜங்ஷன் மற்றும் மத்திய பேருந்து நிலையம் வழியாக செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திருச்சி மாநகரப் பேருந்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது. பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு இந்த மாற்றம் நிகழும். புதிய பேருந்து நிலையத்தை மே 9-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் எல்லாம் பஞ்சப்பூரில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து இனி இயக்கப்பட இருக்கின்றன

திருச்சியில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் இனி பஞ்சப்பூர் வரை இயக்கப்படும். புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதும், பேருந்துகளின் முக்கிய இடம் பஞ்சப்பூருக்கு மாற்றப்படும். வெளியூர் செல்லும் பேருந்துகள் தரை தளத்தில் இருந்தும், நகரப் பேருந்துகள் முதல் தளத்தில் இருந்தும் இயக்கப்படும்.

நகரப் பேருந்துகளின் பயண தூரம் சுமார் 5 கி.மீ வரை அதிகரிக்கும். புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நகரப் பேருந்துகள் பஞ்சப்பூரில் இருந்து புறப்பட்டு திருச்சி ஜங்ஷன் மற்றும் மத்திய பேருந்து நிலையம் வழியாக செல்லும். மத்திய பேருந்து நிலையம் நகரப் பேருந்து நிலையமாக மாற்றப்படும். எந்த பேருந்தும் மத்திய பேருந்து நிலையத்தை தவிர்க்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

பயண தூரத்திற்கு ஏற்ப நகர மற்றும் வெளியூர் பேருந்துகளின் கட்டணம் மாறலாம் என்றும் மதுரைக்கும் திருச்சிக்கும் இடையேயான பேருந்து கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், வடக்கில் உள்ள நகரங்களுக்கான பேருந்து கட்டணம் சற்று அதிகரிக்கலாம் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/BXKVDj6xV1jE6ZPiwp79ix