மயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் வித்தை காட்டிய இளைஞர்கள் காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர், இனி பைக்கில் பயணிக்கும் போது இதுபோன்ற வித்தைகளில் ஈடுபட மாட்டேன் என்றும், ஹெல்மெட் அணிந்து கொண்டுதான் பைக் ஓட்டுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. 4 நாட்களுக்கு முன்பாக இளைஞர் ஒருவர் இந்த சாலையில் தனது யமஹா ஆர்15 பைக்கில் சாகசத்தில் ஈடுபட்டார்.

அதிலும் பைக்கின் பின் இருக்கையின் நுனியில் அமர்ந்து கைகளால் ஹேண்டில் பாரினை பிடிக்காமல் சென்றார். இது அவருக்கு மட்டுமல்லாமல் அருகில் செல்வோருக்கும் ஆபத்தை விளைவிப்பதை போல் அமைந்தது. இதனை வீடியோவாக எடுத்து சில சோசியல் மீடியாவில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ ட்ரெண்டான போது, சமூக ஆர்வலர்கள் பலரும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த வாகனம் யாருடையது, அந்த இளைஞர் யார் என்று காவல்துறை விசாரணையை தொடங்கியது. இந்த நிலையில் பொது இடத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்டவரை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் தரப்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், என் பெயர் பாலகிருஷ்ணன்.

பிப்.27ஆம் தேதியன்று பல்வேறு பணிகளுக்காக என் வண்டியை எடுத்து சென்ற போது, கைகளை விட்டு பைக்கை ஓட்டியது சோசியல் மீடியாவில் பெரிய செய்தியாக பரவிவிட்டது. இதன்பின் சமயபுரம் காவல்துறையினர் என்னை கைது செய்து, வழக்குப்பதிவு செய்துவிட்டார்கள். இனிமேல் ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக் ஓட்டுவேன், இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இளைஞரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.