10 ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில்,

 

1. ”தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்: 20681) கூடுதலாக இரண்டு முன்பதிவில்லாத பெட்டிகள், ஒரு முன்பதிவு பெட்டி இன்று மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் 18ம் தேதி வரை இணைக்கப்பட்டு இருக்கும்.

2. மறுமார்க்கமாக செங்கோட்டை-தாம்பரம் ரயிலில் (வ.எண்: 20682) இதேபோல் கூடுதலாக இரண்டு முன்பதிவில்லாத பெட்டிகள், ஒரு முன்பதிவு பெட்டி மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் 19ம் தேதி வரை இணைக்கப்பட்டு இருக்கும்.

3. தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வ.எண்: 22657) இரண்டு முன்பதிவில்லாத பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவு பெட்டி மார்ச் 2ம் தேதி முதல் ஜூன் 16ம் தேதி வரை இணைக்கப்பட்டு இருக்கும்.

4. மறுமார்க்கமாக நாகர்கோவில்-தாம்பரம் ரயிலில் (வ.எண்: 22658) இரண்டு முன்பதிவில்லாத பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவு பெட்டி மார்ச் 3ம் தேதி முதல் ஜூன் 17ம் தேதி வரை இணைக்கப்பட்டு இருக்கும்.

5. திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வ.எண்: 22627) ஒரு முன்பதிவில்லாத பெட்டி மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி இணைக்கப்பட்டு இருக்கும்.

6. மறுமார்க்கமாக திருவனந்தபுரம்-திருச்சி ரயிலில் (வ.எண்: 22628) ஒரு முன்பதிவில்லாத பெட்டி மார்ச் 5ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி இணைக்கப்பட்டு இருக்கும்.

7. இதேபோல் திருவனந்தபுரம்-குருவாயூர் (வ.எண்: 16342),

8. குருவாயூர்-திருவனந்தபுரம் (வ.எண்: 16341) ஆகிய ரயில்களிலும் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்கப்படுகிறது. மேலும்

9. கண்ணூர்-எர்ணாகுளம் (வ.எண்: 163036),

10, ஆலப்புழா-கன்ணூர் (வ.எண்: 16307) ஆகிய ரயில்களிலும் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb