திருச்சி மாவட்டத்தில் சமீபத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பறவைகள் பூங்காவானது மிகவும் பிரம்மாண்டமான முறையில் திறந்து வைக்கப்பட்டது.

இதனை பார்வையிடுவதற்காகவே தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும் அவர்கள் சொந்த வாகனங்களில் வருவதால் அதனை நிறுத்துவதற்கு உரிய வசதி இல்லை என்று புகார் தெரிவித்து வந்த வண்ணம் இருந்தனர். மேலும் அவர்களுக்காக அய்யாளம்மன் படித்துறை பகுதி அருகே 200 கார்களை நிறுத்தும் வகையில் தற்காலிக பார்க்கிங் வசதியானது செய்யப்பட்டிருந்தது. 

தற்போது இந்த பறவைகள் பூங்காவுக்கு எதிரே பொதுப்பணித்துறை சார்பில் இருக்கக்கூடிய நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் குப கிருஷ்ணன் ஒப்பந்த அடிப்படையில் 99 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்து பராமரித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர் குப கிருஷ்ணன் கடந்த ஆண்டுக்கான குத்தகை பணம் செலுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே குத்தகை விதிமுறைகளை மீறியதன் காரணத்திற்காக இந்த நிலத்திற்கான குத்தகையை ரத்து செய்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறுகையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை இன்னும் 7 நாட்களுக்குள் மீட்கப்பட்டு அங்கு பறவைகள் பூங்காவுக்கான நிரந்தர வாகன நிற்கும் இட வசதி செய்து கொடுக்கப்படும் என அவர் கூறினார்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb