அண்ணா கோளரங்கத்தில் சனிக்கிழமை வான்நோக்கும் நிகழ்வு!

திருச்சியில் உள்ள அண்ணா கோளரங்கத்தில் வான்நோக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது.
வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்கள் ஒரே நோ்கோட்டில் வானில் தெரியும் அரிய நிகழ்வு ஜன. 3-ஆம் தேதி முதல் பிப்.13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சூரியன் மறைவுக்கு பிறகு இந்த நிகழ்வை பாா்க்கலாம். இதில், நெப்டியூன், யுரேனஸ் ஆகியவற்றை தொலைநோக்கியால் மட்டுமே காண முடியும். மற்ற கோள்கள் கண்ணுக்கு எளிதாக தெரியும்.
திருச்சி அண்ணா அறிவியல் மையத்தின் கோளரங்க வளாகத்தில், சனிக்கிழமை வான்நோக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்து. வானம் தெளிவாக இருக்கும் நிலையில் பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் வான்நோக்கும் நிகழ்வை எளிதில் காண முடியும். சனிக்கிழமை இரவு 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த வான்நோக்கும் நிகழ்வு பொதுமக்களுக்காக நடத்தப்படும் என கோளரங்கத்தின் திட்ட இயக்குநா் ரா. அகிலன் தெரிவித்துள்ளாா்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....