திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஆண் பயணி ஒருவர் தனது பேண்ட் டிக்கெட் பாக்கெட் மற்றும் லக்கேஜில் 15 தங்க சங்கிலிகள், 3 பிரேஸ்லெட், 2 மோதிரம், 6 தங்க தோடுகள் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் இருந்து ரூபாய் 22 லட்சத்து 41 ஆயிரத்து 790 மதிப்புள்ள 282 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb