பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகிலேயே டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது. 14.16 ஏக்கரில் ரூ.315 கோடியில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் டைடல் பார்க் அமைய உள்ளது.

திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் இந்த டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது. இந்த டைடல் பார்க்கில் 740 கார் நிறுத்துமிடம் மற்றும் 1500 இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த டைடல் பார்க் மூலம் 5000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும். இரண்டு கட்டங்களாக கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. முதல் கட்ட கட்டுமான பணிக்கு ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி மாத இறுதிக்குள்ளேயே கட்டுமான பணிகள் தொடங்கிவிடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். கட்டுமான பணிகள் சுமார் 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திருச்சி, மதுரையில் அமைய உள்ள டைடல் பார்க்குகளுக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb