7 ஆயிரத்து 383 பயணிகளை கையாண்டு திருச்சி விமான நிலையம் உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் விமான நிலையம் விரிவாக்கப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தால் மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11-ந் தேதி 33 வெளிநாட்டு விமான சேவைகளும், 25 உள்நாட்டு விமான சேவைகள் என மொத்தம் 58 விமான சேவைகள் இயக்கப்பட்டது. இதில் வெளிநாடுகளில் இருந்து திருச்சி வந்த 17 விமானங்களில் 2 ஆயிரத்து 894 பேரும், திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற 16 விமானங்களில் 2 ஆயிரத்து 530 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

அதேபோல் உள்நாடுகளில் இருந்து திருச்சி வந்த 12 விமானத்தில் 1,100 பேரும், திருச்சியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சென்ற 13 விமானத்தில் 859 பேரும் பயணம் செய்தனர். இவ்வாறு இருக்க 11-ந் தேதி மட்டும் 5 ஆயிரத்து 424 வெளிநாட்டு பயணிகளும், 1959 உள்நாட்டு பயணிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 383 பேரும் சென்றுள்ளனர். இதற்கு முன்பு 6 ஆயிரத்து 500 பயணிகளை கையாண்டதே உச்சமாக இருந்தது. 

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb