திருச்சி மாநகராட்சியுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியானது நடத்தப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் திருச்சி திருவிழா நடத்தப்பட இருக்கிறது. இந்த ஆண்டு 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நீதிமன்றம் அருகே உள்ள ஸ்டூடண்ட்ஸ் ரோடு, மற்றும் உழவர் சந்தை அருகே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியானது தமிழக அரசு சார்பிலும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பிலும் யங் இண்டியன்ஸ், சிஐஐ சார்பிலும் நடத்தப்படுகிறது. இதில் ஏர் ஷோ, பொங்கல் பண்டிகை, உணவகங்கள், நாய்கள் கண்காட்சி, பைக் மற்றும் ரோடு ஷோ, பொங்கல் கோலப்போட்டி, ரோபோட்டிக்ஸ் & ட்ரோன் ஷோ மற்றும் லேசர் ஷோ போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன.

இவை அனைத்திற்கும் முன்பதிவானது தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் நிகழ்ச்சி தொடங்க இருப்பதால் திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் ஆவலுடன் இந்த நிகழ்ச்சிகளை காண காத்துக்கொண்டுள்ளனர். பலரும் ஸ்டால்கள் அமைப்பதற்கு முன் பதிவு செய்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் இதற்குமுன்பு இந்த இடத்தில் கடந்த ஆண்டு ஹேப்பி ஸ்ட்ரீட் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த ஆண்டு அமைச்சர் கே என் நேரு வழிகாட்டுதலின் பெயரில் திருச்சி திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb