திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி அடுத்து இருக்கக்கூடிய பத்தாளப்பேட்டையில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் மேகலத்தூர் வரை ஒருவழிப்பாதையாக இருந்து வந்தது. அதாவது பத்தாளப்பேட்டை முதல் தஞ்சாவூர் மாவட்டம் மேகலத்தூர் வரை சுமார் 10 கிமீ தூரம் ஒருவழிச்சாலையாக இருந்து வந்தது.

இதனை 2 வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், 9.4 கி.மீ தொலைவு இணைப்பை மேம்படுத்தும் வகையில் மேகலத்தூர்-பத்தாளப்பேட்டை சாலையை ஒற்றைப் பாதையில் இருந்து இருவழியாகவும் விரிவுபடுத்த ₹20.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb