கன்னியாகுமரியில் உள்ளதைப் போன்ற திருவள்ளுவா் சிலை மாதிரியை திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், செய்தி மக்கள் தொடா்புத் துறையினா் சனிக்கிழமை வைத்துள்ளனா்.

தமிழ்நாடு முதலமைச்சர் முக்கடலும் சந்திக்கும் கன்னியாகுமரி கடலில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி உலகத்தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் கொண்டாட அறிவுறுத்தியுள்ளார்கள்.

இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரியில் உள்ளதைப் போன்ற திருவள்ளுவா் சிலை மாதிரியை, மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறையினா் உருவாக்கியுள்ளனா். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த சிலையை பாா்வைக்கு வைக்கப்பட்டு, 25 ஆண்டு கொண்டாட்ட நிகழ்வை பிரசாரம் செய்யவுள்ளனா். இந்த மாதிரி சிலையானது திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை அமைக்கப்பட்டது.
 

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb