டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் வரும் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலு வலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட காலிப்ப ணியிடங்களை நிரப்பும் வகையில் குருப்-4 தேர்வுக்கான அறி விப்பாணை அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதத்தில் வெளியி டப்பட இருக்கிறது. இந்த தேர்வை போட்டித்தேர்வர்கள் சிறப் பாக எதிர்கொள்ளும் வகையில் இலவசமாக சிறப்பு பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 30-ந்தேதி காலை 10 மணி அளவில் தொடங்க உள்ளது. மேற்கண்ட பயிற்சி வகுப்பில், சிறந்த பயிற்றுனர்களை கொண்டு அனைத்து பாடப்பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், பாடவாரியாக மாதிரித்தேர்வுகள் நடத் தப்பட்டு இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். ஆகவே, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து போட்டித் தேர்வர்களும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையலாம். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிர தீப்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb