திருச்சி-கோவை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

ஏற்கனவே பணிகள் தொடங்கி கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் மீண்டும் தொடங்க வேண்டும் என்று எதிர்பாக்கின்றனர்.
திருச்சி மாவட்டத்திலிருந்து கோவை மாவட்டத்திற்கு ஆறு வழி விரைவுச்சாலை அமைப்பதற்காக 2019- 2020 ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் சர்வே பணிகள் மற்றும் மண் பரிசோதனைகள் அனைத்தும் துரிதமாக நடைபெற்றன.
திருச்சி மாவட்டத்தை அடுத்த வண்ணாங்கோவிலில் இருந்து கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி, சேங்கல், கரூரில் தெற்கு தேக்கம்பட்டி வழியாக கோவை மாவட்டம் சூலூர் வரை இந்த ஆய்வுகள் அனைத்தும் செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு நிலம் கையப்படுத்துவது உள்ளிட்ட எந்தவித பணிகளும் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெறவில்லை. தற்போது இருக்கக்கூடிய கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆனது முழுமையான நான்கு வழிச்சாலையாக இல்லாமல் இருந்து வருகிறது.
இதனால் இந்த சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதன் காரணமாக திருச்சி மாவட்டத்திலிருந்து கோவை மாவட்டத்திற்கு ஆறு வழி விரைவுச்சாலை பணிகளை உடனே தொடங்க வேண்டும் எனவும் இதற்கான பணிகளை தொடங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....