கடந்த 2023-24-ம் ஆண்டில் சிங்கப்பூருக்கான பயணிகள் போக்குவரத்தில் இந்திய விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையம் இருந்து சுமார் 5.5 லட்சம் பயணிகள் கையாண்டு 4-வது இடமும், இதேபோல் கோலாலம்பூர் சேவையில் சுமார் 3.4 லட்சம் பயணிகளை கையாண்டு 3-வது இடத்தை திருச்சி சர்வதேச விமான நிலையம் பிடித்துள்ளது 

பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, ஆகிய 5 மெட்ரோ விமான நிலையங்கள் தென்கிழக்கு ஆசியாவுடனான பயணிகள் போக்குவரத்தில் திருச்சியை விட அதிக அளவில் பயணிகள் போக்குவரத்தை கையாண்டு இருக்கின்றன. இந்த நிலையில் திருச்சி-மலேசியா விமான சேவையில் பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஏர் ஏசியா மற்றும் மலிண்டோ விமான நிறுவனங்கள் கூடுதல் சேவை அளிக்க தற்போது முன் வந்து இருக்கின்றன. இதன் மூலம் அதிகளவிலான சேவைகள் வரும் நாட்களில் இயக்கப்படும்.

இந்நிலையில் இன்று முதல் வாரத்துக்கு கூடுதலாக ஏர் ஏசியா 3 சேவையும் மலிண்டோ 7 சேவையும் என மலேசியாவுக்கு 10 விமான சேவைகளை இயக்க முன் வந்துள்ளன. இதன் மூலம் தென்கிழக்காசிய நாடுகளுக்கான விமான சேவையில் மெட்ரோ அல்லாத விமான நிலையங்களில் திருச்சி முதலிடம் என்ற (72 விமான சேவைகள்) பெருமையை தற்போது பெற்றுள்ளது. 

பயணிகள் தொடர்ந்து வந்து செல்வதற்கு வசதியாக பக்ரைன், ரியாத், ஜித்தா ஆகிய வளைகுடா நகரங்களுக்கு விமான சேவை அளிக்க வேண்டும் என பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb