லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலைய பணிகள் துவக்க விழா நாளை காலை நடக்கிறது.

நாளை அமைச்சர் கே என் நேரு அடிக்கல் நாட்டுகிறார்.
கே.என்.நேரு ஆலோசனையின் பேரில் லால்குடி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு லால்குடி நகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள், பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் புதிய நகராட்சி அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார்.
தற்போது லால்குடி - பூவாளூர் சாலையில் 5 ஏக்கர் நிலம் தனியாரிடம் பெறப்பட்டு புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது.
அதற்கான பணிகளுக்கான தொடக்க விழா இன்று 21-ம் தேதி வியாழக்கிழமை காலை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் அமைச்சர் கேஎன் நேரு கலந்து கொண்டு புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்க இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், பெரம்பலூர் எம்பி அருண் நேரு, லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் பகுதி மக்கள் கலந்து கொள்கின்றனர்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....