திருச்சியின் அடையாளமாக இருந்த பழமைவாய்ந்த ஜங்ஷன் பாலம் அகற்றம்

திருச்சியின் அடையாளமாக இருந்த பழமைவாய்ந்த ஜங்ஷன் பாலம் அகற்றம்
திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே இருந்த ஜங்ஷன் பாலத்தை போக்குவரத்துக்கு பயன்படுத்துவது சிரமமாக இருந்தது. எனவே, அந்தக் குறுகிய ரயில்வே பாலத்துக்கு மாற்றாக கடந்த 2014ஆம் ஆண்டு 5 வழித்தடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளன.
இருப்பினும் பழைய பாலத்தை அகற்றி அங்கு அகலமாக புதிய பாலத்தை கட்டவுள்ளன. அதற்கு முன் பழைய பாலத்தை இடிக்கும் பணி கடந்த அக்.13ஆம் தேதி தொடங்கியது.
பாலமானது நவீன தொழில்நுட்ப முறையில் (Diamond Rope Cutting) பகுதி, பகுதியாக வெட்டிப் பிரித்து எடுக்கப்படுகிறது. தற்போது பாலத்தின் கீழே Railyway பாதை உள்ளதால் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் பாலம் அகற்றப்படுகிறது.
தற்பொழுது பாலத்தின் நடுப்பகுதி முழுமையாக அகற்றப்பட்டு தாங்கு தூண்கள் மட்டுமே காட்சியளிக்கின்றன. பழைய பாலத்துக்கு அருகில் உள்ள புதிய மேம்பாலத்தில் இருந்து பாா்த்தால் Railway பாதை மட்டுமே தெரிகிறது. பாலம் இருந்த அடையாளமே தெரியாத வகையில் உள்ளது. புதிதாக அகலமான பாலம் கட்டப்படுவது போக்குவரத்துக்கும், மாநகர மக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....