திருச்சியில் ரூ.290 கோடியில் 8 தளங்களுடன் உலக தரத்தில் கலைஞர் நூலகம் டெண்டர் கோரியது அரசு: 2026ல் பயன்பாட்டிற்கு வரும்

திருச்சியில் ஏழு தளங்களுடன் 4.57 ஏக்கா் பரப்பளவில் கருணாநிதி பெயரில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் கருணாநிதி பெயரால் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இதன்படி, தற்போது நூலகக் கட்டட வடிவமைப்பை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
இதில் முதற்கட்டமாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க அமைக்க திருச்சி டிவிஎஸ் டோல் கோட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நூலுகம் தரை தளத்துடன் சேர்த்து மொத்தம் 8 தளங்கள் கொண்டதாக இதனை அமைக்க பொதுப்பணித்துறை திட்டம் வகுத்துள்ளது. இந்த நிலையில், கட்டட வடிவமைப்பு தயார் செய்யவும், ஆலோசகர்களை தேர்வு செய்யவும் பொதுப்பணித்துறை டெண்டர் கோரியது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு, வரைபடம் பொது பணித்துறையால் தேர்வு செய்யப்பட்ட பிறகு கட்டுமான பணிகளுக்கான டெண்டர் கோரப்படும்.
தமிழகத்தில் சென்னை, மதுரைக்கு அடுத்து உலகத் தரம் வாய்ந்த நூலகம் மற்றும் அறிவு சாா் மையம் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘பிரமாண்ட நூலகத்தில் தமிழ், ஆங்கில புத்தகங்கள் தனித்தனியாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பிரிவும், அறிவியல் மையம், விளையாட்டு மற்றும் ரோபோட்டிக்ஸ் பிரிவு, ஏஐஐ (ஆர்டிபிசியல் இண்டலிஜன்ட்ஸ் பிரிவு), அறிவுசார் மையம், உள்ளிட்ட பிரிவுகள் அமைய உள்ளது. டெல்டா மாவட்டங்களில் பெருமையை அறிவிக்கும் விதமாக ஒரு ஆர்ட் கேலரி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதைபோல், ஆயிரம் பேர் அமரக்கூடிய ஒரு பிரமாண்ட கூட்ட அரங்கமும் அமைய உள்ளது. நூலகத்தின் கட்டுமான பணிகள் ஜனவரி 2026ல் முடிந்து பயன்பாட்டிற்கு வரலாம்’’ என்றனர்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....