கடந்த 2 நாட்களுக்கு முன்பு துறையூர் பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, கடைக்கால் வழியாக நீர் செல்கிறது. தற்போது மழை பெய்ததால் ஏரியில் இருந்து மீண்டும் அதிக அளவில் நீர் வெளியேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் ஏரியின் கடைக்கால் பகுதியில் நின்று செல்பி எடுத்து வருகின்றனர்.

 

தற்பொழுது பெய்து வரும் மழை காரணமாக துறையூர் , உப்பிலியபுரம் ஒன்றியத்தில் ஒரு சில ஏரிகள் நிரம்பி வருகின்றன. தற்பொழுது பெரிய ஏரி ஆனது அதன் முழு கொள்ளளவையும் எட்டி கடல் போல் காட்சி அளித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் ஏராளமானோர் நேரில சென்று அங்கு புகைப்படம் எடுத்து ரசித்து வருகின்றனர்.

 

இதனால் திருச்சி மாவட்டத்தின் மினி சுற்றுலாத்தளமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.