திருச்சி மாநகரில் உள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளில் பெரும்பாலானவையும், திருச்சி மாவட்ட எல்லையோரத்தில் பெரம்பலூா், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளும் ஊா்வலமாக எடுத்து வந்து திருச்சி காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்படும்.

இதையொட்டி திருச்சி காவிரி ஆற்றின் பாலத்தில் சிலைகளை அமா்த்தி பூஜை செய்த பிறகு, ஆற்றில் இறக்குவதற்கு ஏற்ற வகையில் மேடைகள், தடுப்பு கட்டைகள் உள்ளிட்டவை மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், கிரேன்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. காவல்துறை சாா்பில் கண்காணிப்பு கேமிராக்கள், மையம் அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb