புதைவடிகால் தொட்டிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க இனி இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்: மு. அன்பழகன்

கழிவு நீா் பாதைகளில் உள்ள அடைப்புகளை அகற்றுவதற்கு ‘சூப்பா் சக்சா்’ வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் சிறிய தெருக்களில் இந்த வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தானியங்கி ரோபாட்டிக்ஸ் இயந்திரங்களை பயன்படுத்தி அடைப்புகளை சரிசெய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 60-ஆவது வாா்டு, காஜாமலை பகுதியில், புதைவடிகால் தொட்டிகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சோதனை முறையில் அகற்றும் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அவற்றை மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியது, மாநகராட்சியில் புதைவடிகால் தொட்டிகளுக்குள் ஏற்படும் அடைப்புகளை நீக்குதல், சாக்கடை அடைப்புகளை நீக்கும் பணிகளுக்கு துப்புரவு தொழிலாளா்களை பயன்படுத்தப் போவதில்லை. இதுபோன்ற இயந்திரங்களைக் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....