திருச்சி அருகே 10 ஆண்டாக நிலத்தை அளந்து கொடுக்காததால் பட்டா இருந்தும் வீடு கட்டமுடியாமல் தவிக்கும் மக்கள்

இதுபற்றி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்தனர். 2015-ம் ஆண்டு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவில் ஒரு சிக்கல் வந்துள்ளது. யாருக்கு எந்த இடத்தில் இடம் வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியாமல் தவிக்கிறார்கள்.
தொட்டியம் மற்றும் குளித்தலை தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறுகையில், "கடந்த 2015-ம் ஆண்டு தொட்டியம் கொசவம்பட்டியில் அனைத்து சமூகத்தை சேர்ந்த 194 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 29 பேருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவுக்கு மட்டும் உரிய நிலத்தை இதுவரை அளந்து கொடுக்கவில்லை. மற்ற அனைத்து சமூகத்தினருக்கும் அளந்து கொடுத்து விட்டார்கள்.
இதனால் தங்களுக்கு உரிய இடம் எது என்று தெரியாமல் வீடு கட்டி குடியிருக்க முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனே நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....