திருச்சி மாவட்டத்திலிருந்து தாம்பரத்திற்கும் தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கும் திருவிழா கால சிறப்பு ரயிலானது தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்திலிருந்து வருகிற புதன்கிழமை மதியம் 12 மணிக்கு இந்த ரயில் ஆனது புறப்பட இருக்கிறது.

வண்டி எண் 06118 திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கும் பண்டிகை கால சிறப்பு ரயிலானது இயக்கப்படும். இந்த ரயிலானது வியாழக்கிழமை ஆகஸ்ட் 28- ந் தேதி திருச்சியில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக தாம்பரம் ரயில் நிலையத்திற்கு மாலை 4 மணி 20 நிமிடங்களுக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல் மறு மார்க்கமாக வண்டி எண் 06117 தாம்பரத்தில் இருந்து வருகிற வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 30-ந் தேதி காலை 10 மணி 45 நிமிடங்களுக்கு புறப்படும் ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம் வழியாக மாலை 4 மணி 10 நிமிடங்களுக்கு திருச்சி மாவட்டத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb