திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து விமான நிலையத்திற்கு தினந்தோறும் மூன்று முறை அரசு போக்குவரத்து சேவை துவங்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், சமயபுரம் டோல்கேட் ஆகிய பகுதிகளுக்கு தினமும் அரசு பேருந்து சேவை இன்று முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து விமான நிலையத்திற்கு தினந்தோறும் இந்த போக்குவரத்து சேவை மூன்று முறை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb