திருச்சியில் மரகத பூஞ்சோலை திறப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(14.08.2024) தலைமை செயலகத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் உள்ள 75 மரகத பூஞ்சோலைகளை திறந்து வைத்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், பொகைப்பட்டி கிராமத்தில் 1 ஹெக்டேர் பரப்பளவில் 62 வகையான சுமார் 700 மரக்கன்றுகள் பல்லுயிர் பெருக்கம் ஏற்படுத்தும் வகையில் கனி தரும் மரத்தோட்டமும், மருத்துவ குணம் வாய்ந்த மரங்களும் மற்றும் 41 வகையான பல்லுயிர் மரத்தோட்டத்துடன் உருவாக்கப்பட்ட மரகத பூஞ்சோலையையும் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இது 2023-24 ஆம் ஆண்டில் வனத்துறை மூலம் பூங்கா அமைக்கும் பணியானது பல்வேறு உள் கட்டமைப்புகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பூங்காவானது பொய்கைமலை காப்புக்காட்டிலிருந்து 2 கி.மீ தொலைவிலும் மணப்பாறையிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது. உள்ளூர் மக்கள் எளிதில் பயன் அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்காவின் நுழைவு வாயிலின் வலது பக்கத்தில் ஒவ்வொரு ராசிக்கும் உகந்த செடிகளை கொண்டு வட்ட வடிவிலான ஒரு ராசி வனம் உருவாக்கபட்டுள்ளது. இப்பூங்காவானது பசுமை போர்வையை அதிகரிக்கவும் பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கவும் மக்களுக்கு ஓர் இயற்கையான சூழலில் பொழுதுபோக்கு இடமாகவும் இருக்கும்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....